வீரத்திருமகள்

ஒரு சிரிய மலை. மலைச்சரிவு முழுவதும் அடர்ந்த மரங்கள். மரங்களாய் அடர்ந்த காட்டுப் பகுதியில் பல நூரு ஜீவராசிகள். பறவைக் கூட்டங்கள், விலங்குகள், மீன்கள் என அத்துனை வளம். மலையின் அடிவாரத்தில் சின்னதாய் ஓர் அழ‌கான கிராமம். பத்துப் பதினைந்து வீடுகள் இருக்கும். சில்லென்று வீசும் காற்று அங்கிருந்த தென்னைமர‌ ஓலைகளை அழகாய் மீட்டியது. பறவைகளின் இசை நெஞ்சை இதமாய் வருட‌, மேகக் கூட்டம் இந்த அழகையெல்லாம் நின்று நிதானமாய் ரசித்தபடியே கடந்து சென்றது.

அந்த கிராமத்தில் ஒரு வீடு. வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம். மரத்தடியில் ஒரு பெண் அமர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். இந்த இயற்கை அன்னையின் வாரிசு இவளே என சொல்லும் அளவிற்கு இத்தனை அழகிற்கும் மொத்த உருவாய் வீற்றிருந்தாள். வீட்டின் உள்ளே ஒரு சீலைத் தொட்டிலில் தன் ஆறு மாதமேயான செல்லக் குழந்தை ரம்மியமாய் உரங்கிக் கொண்டிருந்தது. கனத்த கருங்குழல் சுருண்டு தன் தோளின்மேல் மய்யல் கொள்ள இயற்கையின் இனிமையில் தன்னை மறந்து உள்ளம் இசைக்கும் பாட்டை அவள் குரல் ரீங்காரம் போட்டது. தன் கண‌வன் அன்று இரவு ஊர் திரும்புகிறான் என்ற எண்ணமே அவள் விழிகளில் கனவுகளை நிறைத்தது. ஒரு மெல்லிய‌ புண்ணகை அவள் இதழோரத்தில் தோன்ற அவள் கண்ணக் குழிகளில் தன் வெட்கத்தைப் புதைத்தாள். சில மணித்துளிகள் தன்னை மறந்தாள்.

காற்றின் வேகம் மாறியது. ரகமும் மாறியது. இயற்கை அன்னையின் கோல முகம் திடீரென அடர்ந்தது. கீதம் பாடிய பறவைகள் அலறல் எழுப்பின. கையில் இருக்கும் முரதின் சீரான ஆட்டத்தில் இருந்து தன் கவன‌த்தைப் பெயர்த்தெடுத்தாள். அவள் அடிவயிற்றில் இருக்கம் தோன்றியது. தொண்டை வறண்டு போக எச்சிலை வலிந்து விழுங்கினாள். தன்னைச் சுற்றிலும் மாற்றம் ஏன் எனக் கண்டறிய முயற்சித்தாள். அவள் கருகரு விழிகள் நாற்புறமும் தடயங்களைத் தேடின. அந்த நொடி, அவள் தேடலின் விடை அவள் அறிவிற்கு எட்டிய அந்த நொடி, அவள் மூச்சு உறைந்தது! உடற்முழுவதும் புல்லறித்துப் போய் விழிகள் விரிந்தன. இத்தனை கலவரத்தையும் அரியாது இன்னும் அமைதியான உரக்கதில் ஆழ்ந்திருந்த தன் குழந்தையை நோக்கி ஏக்கமாய் ஒரு முறை பார்த்தாள்.

அவள் விழியோரத்தில் ஒரு உருவம் அசைய மின்னலாய் அவள் விழிகள் அந்தப் பக்கம் பாய்ந்தன. அவள் வீட்டு வாசலில் அது நின்றுகொண்டிருந்தது. மதிய வெயிலில் அதன் உடல் தங்கமாய் மின்ன, இருளின் நிறத்தை தன்மீது பட்டை பட்டையாக அப்பிக்கொண்டிருந்தது. வலிமை வாய்ந்த கால்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து மிகுந்த‌ ஆணவத்தோடும் உரிமையோடும் அவளை நோக்கி நெருங்கியது. தன்னை அது நெருங்க நெருங்க தன் இதயத் துடிப்பு ஏரிக்கொண்டே போவதை அவள் உணர்ந்தாள். இந்த ஒரு கணம், தன்னை காக்கும் என நம்பிய கடவுள், கணவன், கட்டுப்பாடுள்ள சமூக வாழ்க்கை என அனைத்து வேலிகளும் எங்கே என அவள் பதறினாள். “எல்லையம்மா! உன் பிள்ளையை எப்படி இந்த இக்கட்டில் விட்டுவிட மனம் வந்தது உனக்கு?” எனக் குமுறினாள். அண்டை அயல் வீட்டார் எல்லாம் வயலுக்கு சென்றுவிட்டார்களே, கத்தினால் கேட்குமா என சிந்தித்தாள். இனி தன் பச்சிளம் குழந்தையின் கதி என்ன எனத் திகைத்தாள்.

குழப்பமும் பயமும் அவள் கண்களை முழுவதுமாய் மரைக்க, பரிதாபமாய் அந்தப் புலியின் முன்னால் நின்றுகொண்டிருந்தாள். கடைசியாக தன் கைகளைக் கூப்பி மன்றாடினால் ஒரு வேளை அது விட்டுவிடுமோ என என்னும் முன் தன் இறையை நோக்கிப் புலி பாய்ந்தது. திரும்பி ஓட முயன்றுகொண்டே தன்னிச்சையாக தன் கையில் உள்ள முறத்தால் தன் முகத்தை மறைத்தாள். பாய்ந்த புலியின் குறி சற்றே விலகி அவள் கை கால்களில் தன் கூரிய நகத்தால் கீரியது. புலியின் அடி தாங்க மாட்டாமல் சுருண்டு விழுந்தாள். காயங்க‌ளில் இருந்து பெருகிய குருதி பூமித்தாயை முகம் சிவக்கச்செய்தது. அவள் விழுந்த அதிர்ச்சியில் தூங்கிய குழந்தை விழித்தெழ, வீர் எனக் குரல் எழுப்பியது.

குழந்தையின் அழுகையை கேட்டு புலி வீட்டுப் பக்கம் நோக்கி நகர, தன் குழந்தை ஆபத்தில் இருப்பதை கண்டு உடலில் புது முருக்கு ஏர உணர்ந்தாள். வலியும் கோபமும் அவள் உடலிற்கு வலிமை கூட்டியது. “என் வீடு, என் குழந்தை. என்ன ஆணவம் இருந்தால் இங்கே வர நீ துணிவாய்” அவள் உள்ளம் சீரியது. தன் வலது கையை பூமியில் பதித்து தன்னை மீண்டும் கண்டறிந்தவளாய் எழுந்தாள். கலைந்த தன் சேலையை இருக்கிக் கட்டினாள். அவிழ்ந்த தன் கூந்தலை வாரி முடிந்தாள். நிமிர்ந்தாள். “என் பிள்ளையை நெருங்க நீ என்னை முதலில் கடக்க வேண்டும்” என்ற எண்ணம் அவளை அந்தப் புலிக்கும் தன் பிள்ளைக்கும் நடுவில் ஒரு மலையாய் உயர்த்தியது. புழுதிபரக்க அவள் நின்றிருப்பதை பார்த்து அந்த புலி உருமியது. உருமல் சப்தம் வேலை செய்யும் கிராம மக்கள் செவிகளில் விழ, அனைவரும் உரைந்தார்கள், அவள் தனியே இருப்பதை நினைத்து விரைந்தார்கள்.

ஆனால் அவள் அசையவில்லை. உள்ளத்தை விடுங்கள், அவள் தலையில் இருந்து சரிந்து விழும் ஒற்றை முடி கூட சலனப்படவில்லை. கோபம் அவள் கண்களில் கொப்புளிக்க கணைகளாய் தன் கண்களை அந்தப் புலியை நோக்கி நிருத்தினாள். சற்றுமுன் பயந்து சரிந்த பெண்ணா இவள் என அந்தப் புலி குழம்பியது. அழும் குழந்தையை நோக்கி மீண்டும் பார்த்தது. “ஏய்!” உயிர் ஜனிக்கும் தன் அடிவயிற்றின் ஆழத்தில் இருந்து அவள் உரக்கக் கத்தினாள். உயிர்கள் அனைத்தும் அந்தக் குரல் கேட்டு அடங்கின‌! முன் வைத்த புலியின் கால் ஒருகணம் பின்வாங்க, அந்த நொடிப்பொழுது போதுமாய் இருந்தது அவளுக்கு! தன் கெண்டைக்கால்களின் வலிமையால் மின்னலாய் அந்த புலியை நோக்கிப் பாய்ந்தாள். தன் இடப்புரம் விழுந்து கிடந்த‌ முரத்தை ஒரு கையால் எடுத்துக்கொண்டே காற்றில் பறக்கும் கணைபோல் தன் உடல் சுழன்று செல்ல‌, புலியின் தலையை நோக்கி தன் மொத்த வலிமையையும் திரட்டி இடியாய் விழுந்தாள். புலி சற்று தடுமாறியது. சீற்றத்துடன் அவள் மேல் மீண்டும் தாக்க, தன் இரு கைகளால் அந்தப் புலியை நிறுத்தினாள். சிறு வயது முதல் காடு மலைகளில் லாவகமாய் ஓடி விளையாடிய கால்கள், வெயிலில் சுட்ட மண் போல் இறுகிய‌ தோள்கள், கடின உழைப்பால் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல் உர‌ம் பாய்ந்த உடல்! பெண்மை என்றால் மென்மை என்று ஏமாந்து விடாதீர், அவள் புலிகளை பெற்றுக்கொடுக்கும் பெண்புலி… வேலிகள் அவளின் கட்டுப்பாட்டிற்கு இல்லை; அவள் கட்டிக்காப்பதற்காக அமைந்தவை!

வலிமை மட்டுமே பழகிப்போன புலிக்கு ஒன்றும் புரியவில்லை. தன் முழு எடையையும் கொண்டு போராடிப் பார்த்தது அந்தப் புலி. அவள் தசைகளில் வலிமை இருந்தாலும், அது ஒரு எல்லை வரை தான் என நினைத்தது. ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த வலிமையை அப்புலியால் அசைக்க‌ முடியவில்லை! எத்துணை முறை விழுந்து புரண்டாலும் அவள் மீண்டும் எழுந்தாள். தாக்கினாள். ஒரு கட்டத்திற்குப் பிறகு புலி சளைத்து விட, தன் கையில் உள்ள முறத்தால் அடித்து விறட்டினாள். அதற்குள் ஊர் மக்களும் கூடிவிட, தான் வந்த வழியே தப்பிது ஓடியது அந்தப் புலி!

அன்று முதல் புலியை முறத்தால் அடிது விறட்டினாள் ஒரு தமிழ்ப் பெண் என்று மக்கள் வழக்கில் அவள் நிலைத்தாள். நிலைத்தது ஒரு பெண்ணின் வலிமை, அவள் உள்ளத்தின் உறுதி, தாய்மையின் காக்கும் உணர்ச்சி!

Update:

You can find the English version of this story/ post here.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s